அன்பு அண்ணன் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்.! மேயர் பிரியா வாழ்த்து.!

Default Image

அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள். என  அமைச்சர் உதயநிதிக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்து. 

சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை மாநகர மேயர் ப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில், அமைதியாய் இருந்தாலும், அடக்கமாய்த் திகழ்ந்தாலும், அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள். என  அமைச்சர் உதயநிதிக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்