சென்னை மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பிய நிலையில் கார் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேயர் பிரியா சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரின் கார் விபத்தில் சிக்கியது. மேயரின் கார், முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதிய நிலையில் பின்னால் வந்த லாரி, மேயர் பிரியாவின் காரின் பின் புறத்தில் மோதியது. இதில் மேயரின் கார் சேதமடைந்துள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்குகளில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இந்த விபத்தில் மேயர் பிரியா கார் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதே சமயம் பிரியாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்