முகக்கவச விழிப்புணர்வில் ஈடுபட்ட சென்னை மேயர்…!
முகக்கவச விழிப்புணர்வில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி 1,400 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மேயர் பிரியா அவர்கள் முகக் கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களாகிய நாம் முககவசம் உயிர் கவசம்” என்பதை உணர வேண்டும். நம்மை பாதுகாத்துக் கொள்ள அரசின் விதிமுறைகளை பின்பற்றி நம்சமுதாயத்திற்க்கு உதவ நாம் கடமைப்பட்டுள்ளோம். கொரோனா இல்லாத தமிழகத்தை மீண்டும் மீட்டெடுப்போம் என பதிவிட்டுள்ளார்.