தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆக இருக்கலாம்! தமிழின் தலைநகரம் மதுரை – பொன்ராதாகிருஷ்ணன்
தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆக இருக்கலாம்! தமிழின் தலைநகரம் மதுரை.
திருநெல்வேலியில் நடைபெற்ற மண்டல அளவிலான பாஜக செயற்குழு கூட்டத்தில் பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆக இருக்கலாம். ஆனால், தமிழின் தலைநகரம் மதுரை தான். அதை யாரும் மாற்ற முடியாது என்றும், மீனாட்சி ஆளும் மதுரை தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக வருவது சாலச்சிறந்தது. மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவித்தால் இப்போதைய சூழ்நிலைக்கு பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பப்படி இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என்றும், இதை அதிமுக அரசுக்கு நான் கோரிக்கையாக வைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.