2 நாள் மழைக்கே சென்னை கடல் போல் காட்சியளிகிறது – பிரேமலதா விஜயகாந்த்!

2 நாள் மழைக்கே சென்னை கடல் போல் காட்சியளிகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் சென்னையில் தொடர்ச்சியாக இது போன்று மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் 2 நாள் மழைக்கே சென்னை கடல் போல காட்சியளிப்பதாகவும், கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலை தான் நீடிக்கிறது எனவும் கூறியுள்ளார். மேலும், ராட்சத வடிகால் வசதி செய்யப்பட்டு நிரந்தர தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025