கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருவதனால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகியவை ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு. முன்பு உள்ள பதிப்புகளை விட இனிமேல் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதனால் 12 நாள் ஊரடங்கு. இதனால் சென்னையிருந்து கூட்டம் கூட்டமாக தங்கள் நகரத்தை விட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினார்கள்.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
- காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
- டீ கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
- மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
- வாடகை ஆட்டோ, டாக்ஸி & தனியார் வாகன உபயோகம் அனுமதி இல்லை.இருந்தாலும் அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது எனவும், ஏற்கனவே இ-பாஸ் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது.
- அரசு நடத்தப்படும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.மேலும் ஜூன் 30 வரை, நான்கு மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக கிடைக்கும்.
- நான்கு மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் இறைச்சிக் கடைகள் மீன் கடைகள் மூட உத்தரவு .
- 12 நாட்களில் ஜூன் 29 -ம் தேதி மற்றும் ஜூன் 30-ம் தேதி ஆகிய நாட்களில் 33 சதவீத பணியாளர்களோடு மட்டும் வங்கிகள் செயல்படும்.
- அத்திவாசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் ,வாகனங்களை பயன்படுத்தாமல் அதாவது, 2 கி.மீ தொலைவிற்குள் நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும்.
- 4 மாவட்டங்களில் 22-ம் தேதி முதல் 26-ம் வரை காலை 8 முதல் மாலை 6 மணி வரை சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் நிவாரண தொகை ரூ.1,000 வீடுகளுக்கு நேரடியாக சென்று பணம் விநியோகம் செய்யப்பட உள்ளனர்.இதனால், 4 மாவட்டங்களில் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படாது.
- நான்கு மாவட்டங்களில் உள்ள உணவகங்கள், காலை 6 மணி – இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.ஆன்லைன் உணவு நிறுவன பணியாளர்கள், பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்று உணவு விநியோகம் செய்யலாம்.
- ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அமலில் இருக்கும். 20.6.2018 நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 5 மணி வரையிலும் எந்தவிதக் தளர்வின்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் .அதே போன்று 27.6.2011 நள்ளிரவு 12 மணி முதல் 29.6.2020 காலை 5 மணி வரையிலும் எந்தவித தளர்வின்றி முழு ஊரடங்கு .
12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
- முழு முடக்கம் அமல்படுத்தப்பட்ட சென்னை முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- வாலாஜா சாலையில் வாகன சோதனையை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்து வருகிறார்.
- தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.
- இந்நிலையில் காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில்,சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும்.
- வெளியில் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் .அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.