தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் உள்ள சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கும், அது தவிர பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வானம் மேக மூட்டத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனுடன் நாளை தமிழக கடலோர பகுதிகளிலும், குமரி கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசப்படும். எனவே அப்பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்ப்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!
February 13, 2025![ops -sengottaiyen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ops-sengottaiyen.webp)
விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!
February 13, 2025![udhayanidhi stalin and kamal haasan](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/udhayanidhi-stalin-and-kamal-haasan.webp)
இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!
February 13, 2025![ben duckett Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ben-duckett-Kevin-Pietersen.webp)