சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
சென்னை , கலாஷேத்ரா கல்லூரியில் 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்து , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி, கடந்த மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தொடர் போராட்டம் நடத்தினர்.
ஆன்லைன் தேர்வு :
இந்த போராட்டத்தை அடுத்து, கல்லூரியானது ஏப்ரல் 6ஆம் தேதி வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவிகளின் செமஸ்டர் தேர்வுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும், ஆன்லைன் முறையில் தேர்வு வைக்கவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ததாக தெரிகிறது .
அவசர ஆலோசனை :
ஆன்லைன் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, இன்று கல்லூரி நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.
ஏப்ரல் 5 தேர்வு :
இந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. எங்கு, எப்படி தேர்வுகள் நடைபெறும் என்ற முழு விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலியல் புகார் விசாரணை :
4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் பெயரில் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…