[Image source : Shutterstock]
இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் நடைபெறும் மோசடிகள் குறித்து சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
சில நாட்களுக்கு முன்னர் சென்னை கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த காரணத்தால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்பதை அறிந்து, அதன் பின்னர் காவல்துறையினர் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் காவல்துறை விசாரணையில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து ஆன்லைன் திருட்டு (Cheating) வழக்காக மாற்றி விசாரணை செய்து ஏப்ரல் 28இல் தனிப்படை பிரிவினர் கொல்கத்தா சென்று, அங்கிருந்து அங்கு 14 நாட்கள் தங்கி, அமனுல்லா கான் , முகமது பைசல், முகமது அசபிக் பால் ஆகிய 22-23 வயது இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்து அவர்களை தமிழகம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், முதலில் கல்லூரி பெண்ணிடம் 760 ரூபாய் கட்டினால் 25 ஆயிரம் கிடைக்கும் என இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் வந்துள்ளது. அந்த கல்லூரி பெண் அதனை நம்பி ஏமாந்து, பணத்தை அளித்துள்ள்ளார். அப்படியே 37,500 ருபாய் வரையில் கொடுத்துள்ளார். பணம் திரும்பி வராததால் பலமுறை கேட்டு பின்னர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என விளக்கம் அளித்தார் காவல் இணை ஆணையர்.
மேலும், தற்போதைய இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதில் வரும் தகவல்களை வெகுவாக நம்புகின்றனர். அதனை தவிர்க்குமாறு சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி செய்தியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தியை குறிப்பிட்டார்.
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…