சென்னை ஐடி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தல்…! காரணம்..?
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில், சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களின் பணியாளர்கள் நாளை வீட்டிலிருந்து பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.