#Breaking:பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!
சென்னை:சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை.
சென்னை புரசைவாக்கம் தி.நகரில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே,கடந்த 2019 ஆம் ஆண்டு சரவணா ஸ்டோரின் வேறு ஒரு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.