சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான்.
இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சேலம் அருகே உள்ள அரியானூர் வரை இந்த சாலை போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ. பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 123.9 கி.மீ. பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ பகுதியிலும், தருமபுரி மாவட்டத்தில் 56 கிமீ. பகுதியிலும், சேலம் மாவட்த்தில் 36.3 கி.மீ. பகுதி என மொத்தம் 277.3 கி.மீ பகுதியில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி)சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதில்,சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது. மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.அதுபோல் நிலத்தை கையகப்படுவர்களிடமே 8 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…