குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் : அரசின் உத்தரவு செல்லும்.!
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக இருந்த சரஸ்வதி அவர்களின் பதவியை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லும் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சரஸ்வதி பதவி வகித்து வந்தார். இந்த பதவியை தமிழக அரசு ரத்து செய்து இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சரஸ்வதி மற்றும் சிலர் பதவியை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சரஸ்வதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர். தனி நீதிபதி அமர்வு தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து இருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக இருந்த சரஸ்வதி பதவியை தமிழக அரசு ரத்து செய்தது செல்லும் என கூறப்பட்டுள்ளது.