விஐபிகளுக்கு 10 அடிக்கு ஒரு பாதுகாவலர் செல்கிறார். ஆனால், மாணவிகளுக்கு பாதுகாப்பாக காவலர்களை நிறுத்தலாமே என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மகளிர் கல்லூரியில் மாணவியின் தந்தையை சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விட்ட்டோரியா என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் கல்லூரியிலும் பாதுகாப்பு பணிக்காக காவலர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும். என கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், ‘ மகளிர் கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினர். விஐபிகளுக்கு 10 அடிக்கு ஒரு பாதுகாவலர் செல்கிறார். ஆனால், மாணவிகளுக்கு பாதுகாப்பாக காவலர்களை நிறுத்தலாமே என கருத்து தெரிவித்தனர்.
இதில் அரசு தரப்பில், மதுரையில் வெவ்வேறு நாட்களில் மகளிர் கல்லூரி முன்பு நடந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘ மகளிர் கல்லூரிகளின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாநில உள்துறை செயலாளர், தமிழக காவல்துறை தலைவர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…