சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன் நாளை ஓய்வு பெறுகிறார்….!
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள் நாளை ஓய்வு பெறுவுள்ளதை முன்னிட்டு, இன்று மாலை அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெறுகிறது.
1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிறந்தவர் தான் நீதிபதி என்.கிருபாகரன். இவர் தனது சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கினார். சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நீதிபதி கிருபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் இவருக்கு 62 வயது பூர்த்தியாக உள்ளதால் இவர் நாளை ஓய்வு பெறுகிறார். இவருக்கு இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற உள்ளது.