நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்கியது ஏன்.? மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.!
கோட்டூர்புரத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்தின் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கும்பகர்ணன் போல தூங்கி கொண்டிருந்தனர்களா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
கோட்டூர்புரம் பகுதியில் விதி மீறி கட்டடம் கட்டியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் விசாரணையில், நீதிபதி மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான கருத்துக்களை முன் வைத்தார்.
கோட்டூர்புரத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்தின் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கும்பகர்ணன் போல தூங்கி கொண்டிருந்தனர்களா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம் செய்துள்ளனர்.
மேலும், சென்னை கோட்டூர்புரத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல் துறை அதிகாரிகள் யார்? என வரும் 7ஆம் தேதி மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.