தன்னார்வாளர்கள் உதவுவதற்கு அனுமதி தேவையில்லை.! தகவல் தெரிவித்தாலே போதும்.!
தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தன்னிச்சையாக பொதுமக்களுக்கு நேரடியாக உதவ சில நிபந்தனைகளை தெரிவித்திருந்தது. அதாவது, நிதியுதவியை அரசு நிவாரண திட்டத்திற்கு அளிக்கலாம் எனவும், நிவாரண பொருட்களை அந்தந்த மாநராட்சி, மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்றோ அல்லது அவர்கள் மூலமாகவோ உதவிகளை செய்யலாம் என அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ தன்னர்வலர்கள், அரசியல் கட்சியினர் போன்றோர் பொதுமக்களுக்கு உதவ அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை. தகவல் தெரிவித்தாலே போதும். ‘ என தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘ உணவு, மளிகை பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குபவர்கள் 2 நாள் முன்னதாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். நிவாரண பொருட்கள் வழங்க 3 பேர் மட்டுமே உடன் செல்ல வேண்டும். நிவாரண பொருட்கள் வழங்கும் இடத்தில் சரியான சமூக இடைவெளி பின்பற்றபடவேண்டும்.’ எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.