கொலை வழக்கில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது – ஐகோர்ட்

chennai highcourt

Chennai High Court : கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஆராவமுதன் என்பவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரை சேர்ந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள்.

Read More – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.!

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ் முன்பு ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய வேண்டும் என்றும் வேறொரு மாவட்டங்கள் அல்லது வேறொரு இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் சரணடைய முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவுகளை சுட்டிக்காட்டினார்.

Read More – திமுக – மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.?

இதனால், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சரண்டரை ஏற்றுக்கொண்டதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்தார். பாதுகாப்பு காரணமாக குற்றவாளிகள் எங்கு வேண்டுமானாலும் சரணடையலாம் என்றும் குற்றவாளிகள் சரண்டரை அனுமதிக்க வேண்டும் எனவும் வாதம் வைத்தார்.

Read More – ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு விபத்து… தலைமையிடம் இதுவா.? முக்கிய நபரிடம் NIA தீவிர விசாரணை.!

இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். குற்ற வழக்குகளில் சரணடைபவர்கள் சம்மந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட  நீதிமன்றங்களுக்கு பதிலாக வேரோரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தன்னட்சியாக சரணடையும் போது தாக்கல் செய்யப்படும் மனுக்களும் விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்