ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிராமண மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ரவீந்திரநாத்தும் வெற்றி பெற்றிருந்தனர். அப்போது, வேட்புமனுவில் அவர்கள் தகவல்களை மறைத்ததாகவும், தவறான தகவல்களை தெரிவித்ததாகவும் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மிலானி புகார் மனு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தேனி நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, ஓபிஎஸ் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிராமண மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் இருவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.