பாஜகவுக்கு தாமரை சின்னம் – தீர்ப்பு ஒத்திவைப்பு!
Chennai High Court : தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியதற்கு எதிராக டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, பாஜகவுக்கு தாமரை சின்னத்தை ஒதுக்கியதற்கு எதிராக இந்திய தலைமை தேர்தல் ஆணையாமிடமும் அவர் கோரிக்கை மனுவும் அளித்திருந்தார்.
Read More – ஜெயலலிதா நகைகளை தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டாம்.. பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
ஆனால், தலைமை தேர்தல் அது சம்மதமாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தாமரையை ஒர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி, நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது. பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
Read More – மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்கும் நடிகர் வடிவேலு? வெளியான தகவல்
இதனால், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னதை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்றும் நடைபெற்றது.
Read More – மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி.. 2 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 51 விருப்ப மனுக்கள்…
இந்த வழக்கு விசாரணையின்போது அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டு நிறைவு பெற்ற நிலையில், தேசிய மலரான தாமரையை, பாஜகவின் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.