அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோகமிஸ்தர் சிலை செய்வதில் முறைகேடுநடந்தது தொடர்பாக அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக கவிதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக எந்த ஒரு அறிக்கை, அவனங்களையும் அரசிடம் சிலை கடத்தல் பிரிவு சிறப்புஅதிகாரி பொன் மாணிக்கவேல் அளிக்கவில்லை என கூறப்பட்டது. ஆதலால் பொன் மாணிக்கவேல் தரப்பு இன்று உயர்நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணையில், இன்று, தமிழக அரசு சார்பில், ‘ சிலை கடத்தல் பிரிவு கூடுதல் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிராக எந்த ஆவணகளையும் அரசிடம் அளிக்கவில்லை’ என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டது.