நேரில் ஆஜராக வேண்டும்- செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மத்திய குற்றப்பிரிவு முன், பிப்ரவரி 14-ஆம் தேதி ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா இறந்த பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.இதையெடுத்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் கடந்த 31-ஆம் தேதி சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தினர்.
மேலும் செந்தில் பாலாஜியின் ஜவுளி ஏற்றுமதி அலுவலகம் மற்றும் அவரின் தம்பி அசோக் வீட்டிலும் வீட்டில் சோதனை நடத்தி நடத்தினர். இதற்கு இடையில் மத்திய குற்றபிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. தேவைப்படும்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்கவும், மற்றும் தினமும் கையெழுதியிடவும் நிபந்தனை விதித்தது உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு முன், பிப்ரவரி 14-ஆம் தேதி ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முன்ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய போலீசார் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025