போலாந்து நாட்டிற்கு பங்கேற்பதற்கு சமீஹா பர்வீன் அழைத்துச் செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலந்து நாட்டில் நடைபெறக்கூடிய தடகளப் போட்டியில் கலந்து கொள்வதற்கு குமரியை சார்ந்த செவித்திறன் குறையுடைய சமீஹா பர்வீன் தகுதி பெற்றார். தகுதி பெற்றவர்களில் நான்கு பேர் ஆண்கள் எனவும், இவர் ஒருவர் பெண் என்பதால் அவர்களுடன் இணைத்து அனுப்ப முடியாது என்று தேசிய விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனால், போலாந்து சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பர்வீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது விளையாட்டு ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால் போட்டி வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுவதால் அவகாசம் வழங்கப்பட்டால் பர்வீன் தடுக்கப்படுவார் என்பதால் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்றைக்குள் பதில் தர நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் தேசிய விளையாட்டு ஆணையம் அளித்த பதிலில் தடகளத்தில் தகுதி சுற்றில் 8வது இடம் பிடித்ததால் தான் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் பெண் என்றதால் வாய்ப்பு மறுக்கப்பட்டது என கூறுவது தவறு என தெரிவித்தனர்.
இதைஏற்க மறுத்த நீதிபதி தடகள தகுதி சுற்றில் சமீஹா பர்வீன் 8வது இடம் பிடித்தாலும் பெண்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். எனவே போலாந்து நாட்டிற்கு பங்கேற்பதற்கு சமீஹா பர்வீன் அழைத்துச் செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…