அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
அம்பா சமுத்திரத்தை சார்ந்த ஒருவர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறங்காவலர் ஆண்டு , மாதம் வருமானம் என்ன..? இந்த கோவிலின் வருமானத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்துகிறார்களாக..? போன்ற தகவல்களை ஆங்கிலம் அல்லது தமிழ் நாளிதழில் ஏதேனும் ஒன்றில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சில அறங்காவலர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , தனிப்பட்ட விபரங்களை கூறமுடியாது என தெரிவித்தார்.
மேலும், தனிப்பட்ட அறங்காவலர் விபரங்களை வேண்டும் என்றால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ளாமல் என தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சில அறங்காவலர் அதிகாரிகளின் பெயர்களை 8 வாரத்தில் வெளியிட வேண்டும்.
மேலும், அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.