புதிய சாலை அமைக்க கோரிய மனு – மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
பழைய சாலையை தோண்டிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என கோரிய வலகழகை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பழைய சாலையை தோண்டி விட்டு, அந்த இடத்தில் முறையாக புதிய சாலை அமைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த மனுவில் பழைய சாலைகளை தோண்டாமல் புதியதாக சாலைகளை போடுவதால், கோவில்கள், சிலைகள், நினைவு சின்னங்கள் ஆகியவை தாழ்வான பகுதிகளுக்கு சென்று விடுவதால் பழைய சாலைகள் தோண்டப்பட்ட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், இந்த பழைய சாலை தோண்டி புதிய சாலை அமைக்கும் வழக்கு குறித்து இன்னும் 4 வாரத்தில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.