தேதி-நேரம் குறிப்பிட்ட சம்மன் முக்கியம்… போலிஸ் விசாரணைக்கு கிடுக்குபிடி உத்தரவு.! உயர்நீதிமன்றம் அதிரடி.!
போலீஸ் விசாரணைக்கு அழைக்க சம்பந்தப்பட்டவரிடம், அதிகாரிகள் எழுத்துபூர்வமான சம்மனை அளிக்க வேண்டும். அதில் தேதி, நேரம் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் விசரணைக்கு தன்னை அடிக்கடி அழைப்பதாகவும், நேரம் காலம் இல்லாமல் விசாரணை நடைபெறுவதாவும் திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை வந்த போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், சம்பந்தப்பட்டவர் வழக்கில் தொடர்புடைய காரணமாக தான் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் என விளக்கம் அளித்தார்.
இது குறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, ‘ விசாரணைக்கு அழைத்து சென்று அவர்களை துன்புறுத்துவது தொடர்பாக பல்வேரு குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. விசாரணைக்கு அழைத்து வருபவர்களை துன்புறுத்த கூடாது. அதே போல குற்ற வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் விசாரணையில் நீதிமன்றம் தலையிடுவது இல்லை.
அதே போல, விசாரணைக்கு அழைக்கும் அதிகாரிகள், யாரை விசாரணைக்கு அழைக்க சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்துப்பூர்வ சம்மன் கட்டயாம் வழங்க வேண்டும். அதில் விசாரணைக்கு அழைக்கப்படும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், விசாரணை நடவடிக்கைகளை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவை உயநீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது.