பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.!
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணபலன்களை வழங்காத விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற குழுவானது தமிழகத்தில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணை படி, பணபலங்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், தற்போது வரையில் அரசாணைப்படி பணபலன்கள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர் ஹரிஹரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, பல முறை பள்ளிக்கல்வித்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தரவில்லை.
இதனால், இந்த வழக்கு விசாரணையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.