கல்வி நிறுவனங்களின் நடக்கும் மரணங்கள்.! நீதிமன்ற உத்தரவில் திடீர் திருத்தம்.!
கல்விநிறுவனங்களில் நடைபெறும் இயற்கைக்கு மாறான மரணங்கள் தேவை இருப்பின் மட்டும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும். மற்றபடி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி காவல் நிலைய அதிகாரிகளே விசாரிக்கலாம். – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.
கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தார். இவர் உயிரிழப்பில் உண்மை தன்மை ஆராய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் இயற்கைக்கு மாறாக நடைபெறும் மரணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து போலீசார் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதில் , கல்வி நிறுவனங்களின் நடைபெறும் மரணங்களை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் மற்ற பணிகள் தாமதமாகின்றன. மேலும், கல்வித்துறை விசாரணை முடிந்த பிறகே குற்றம் சட்டப்பட்டவரை போலீசார் கைது செய்து விசாரிக்க முடிகிறது இதனை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டனர்.
இது குறித்து இன்று விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ‘ ஏற்கனவே குறிப்பிட்ட நீதிமன்ற தீர்ப்பில் திருத்தம் மேற்கொண்டார். அதன்படி, கல்விநிறுவனங்களில் நடைபெறும் இயற்கைக்கு மாறான மரணங்கள் தேவை இருப்பின் மட்டும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும்.
மற்றபடி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி காவல் நிலைய அதிகாரிகளே விசாரிக்கலாம். அதே போல, தேவை ஏற்பட்டால், கல்விதுறை விசாரணை முடியும் முன்னரே சம்பந்தப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்ளலாம் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் திருத்தும் மேற்கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.