ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தன.
இவ்வழக்கை,கடந்த ஜூலை 26 ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.அப்போது,ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி,ஆன்லைன் விளையாட்டில் திறமை அடங்கி இருப்பதாகவும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து,தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி ”ஆன்லைன் விளையாட்டால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்,குறிப்பாக தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.எனவே,பொதுநலன் கருதி இந்த சட்டம் இயற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ஆக. 3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில்,இன்று மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்று கூறி,தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து முன்னதாக பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…