சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.!
சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சித்த மருத்துவத் துறைக்கு ரூ.437 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவ துறைக்கு 10 ஆண்டுகளில் ரூ.3000 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தது.
பிற மருத்துவத் துறைகளை காட்டிலும் சித்த மருத்துவத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு ஆயுஷ் என்ற பெயரில் இருந்து சித்தாவை குறிப்பிடும் ‘எஸ்’ ஐ நீக்கி விடலாமே என்று கூறினர். அந்த வகையில் குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவுவிட்டுள்ளது.