பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனு:தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…!
பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த ஜூன் 5 ஆம் தேதி 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை விதித்தார் முதலமைச்சர் பழனிசாமி .
இந்நிலையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடையை நீக்குமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிளாஸ்டிக் பைகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை இல்லை.விதிவிலக்கு தரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய அறிவுறுத்தியுள்ளது .மேலும் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.