சென்னை பேனர் விவகாரம்! மாநகராட்சி உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

Default Image

சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேனர் விவகாரத்தில் பல அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியானது கடந்த 19ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் அனுமதியின்றி பேனர் வைத்தால், பேனர் அச்சடித்தவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ஐந்தாயிரம் அபராதம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த பிரபல பேனர் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் இவ்வாறு உத்தரவை அனுப்பி உள்ளது. எனவும், பேனர் அச்சிடுவது மட்டுமே எங்கள் வேலை அதனை எங்கு வைக்கிறார்கள் யார் வைத்தார்கள் என எங்களால் கட்டுபடுத்த முடியாது. அதனால் விதி மீறலை தாண்டி வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷாஷ வும், கொண்ட அமர்வு விசாரித்ததில், பேனர் உரிமையாளர்கள் ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர்,  ‘பேனர்  யார் அச்சடிக்க கொடுக்கிறார்கள், எதற்காக அச்சடிக்கிறார்கள், அதனை எங்கு வைக்க போகிறார்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டு பின்பு தாங்கள் பேனர் அச்சடிப்பதாக ஒப்புக்கொண்டனர்.

அதன்பின்னர் பதில் அளித்த நீதிபதிகள், பேனர் வைப்பது குற்றமல்ல ஆனால் அதனை முறைகேடாக வைப்பதுதான் குற்றம். என்றும் கூறி பேனர் நிறுவனத்தில் மாநகராட்சி தெரிவித்திருந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவு குறித்து சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்