7 மாவட்டங்களில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தடையில்லை..!உயர்நீதிமன்றம்
ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்மின் கோபுர திட்டத்திற்கு எதிராக 11 விவசாயிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாய நிலங்களின் மீது உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடிசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் இந்த உத்தரவின் மூலம் 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தடையில்லை என்று தெரியவருகிறது.
மேலும் சட்டீஸ்கரின் ராய்கரிலிருந்து கரூரில் உள்ள புகழூருக்கு 6000MW மின்சாரம் கொண்டு வரும் திட்டத்தை மத்திய மின்தொகுப்பு கழகம் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.