சென்னையில் வாகனங்களில் செல்ல கடும் கட்டுப்பாடு.!

நாளை முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சென்னையில் வாகனங்களில் செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை முதல் 30-ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரின் சில பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை நகர காவல் எல்லையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தும்படி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற சேவைகளின் போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப்படும்.
- மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம், ஆட்டோ மற்றும் டாக்ஸியை பயன்படுத்த அனுமதி. பிற காரணங்களுக்காக வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை.
- அத்தியாவசிய பொருட்களை வாங்க வாகனங்களை பயனபடுத்தாமல், நடந்து சென்று வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற இடங்களுக்கு வாகனங்களில் செல்லக்கூடாது.
- தண்ணீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வானங்கள் உரிய அனுமதி சீட்டை பெற்று வாகனங்களை இயக்க வேண்டும்.
- அனுமதி சீட்டு இல்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025