சென்னை : சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து …!

Default Image

சென்னையில் அரசு பேருந்து சுரங்கப்பாதையில் சிக்கிய நிலையில், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. அதிலும் நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அதிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சாலைகளில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மேலும் தண்ணீர் புகுந்ததால் பெரும்பாலான சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பயணிகளுடன் போரூர் மந்தைவெளி மார்க்கமாக சென்ற அரசு மாநகர பேருந்து சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப் பாதையில் உள்ள மழைநீரில் சிக்கியுள்ளது. மழை நீர் குறைவாக இருப்பதாக நினைத்து ஓட்டுனர் அப்பாதையில் பேருந்து இயற்றியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மழை நீரில் சிக்கி கொண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment
gold price
tvk police