சென்னை திருவிழா, சர்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் திருவிழா இன்று சென்னை தீவுத்திடலில் தொடக்கம்.
சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் நடைபெறும் சர்வதேச கைத்தறி, கைவினை பொருள் மற்றும் உணவு திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ள திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மே 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சென்னை திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். பூட்டான், நைஜீரியா, வங்கதேசம், ஈரான், நேபாளம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கைவினை பொருட்கள் இடம்பெறுகின்றன. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்கள் பொருட்களை 80 அரங்குகளில் காட்சிப்படுத்த உள்ளனர்.
மேலும், இந்த திருவிழாவில் 311 அரங்கங்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் உணவு திருவிழா நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான ‘சென்னை விழா’ ரூ.1.50 கோடி செலவில் நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…