சென்னை தீவுத்திடலில் கோலாகலமாக தொடங்கிய “சென்னை விழா – 2023″…!
சென்னை தீவுத்திடலில் “சென்னை விழா – 2023” திருவிழாவை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
சென்னை தீவுத்திடலில் “சென்னை விழா – 2023” எனும் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சா்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன், ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த திருவிழா, மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.