நக்கல் அடிக்கும் விதமாக இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த சென்னை குடிநீர் வாரியம்
சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15- ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தது. ஆனால் ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்.
பின்னர் ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.இதை தொடர்ந்து அந்த தொழில் நுட்ப கோளாறை இஸ்ரோ சரிசெய்து நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திராயன் -2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டத்திற்கு பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் இஸ்ரோவிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை குடிநீர் வாரியம் வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
அந்த பதிவில் நிலவில் புதிய நீர்வளத்தை தேடும் பணியில் இஸ்ரோ “சந்திராயன் -2″ அனுப்பி உள்ளது. நீங்கள் நிலவில் தண்ணீர் கண்டுபிடித்தால், யாரிடம் முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியும்” என சென்னை குடிநீர் வாரியம் பதிவிட்டு உள்ளது.
Congrats @isro for #Chandrayaan2theMoon.
We are in the process of augmenting new water resources for our city.
If you find any water on the Moon, you know whom to call first ????
????????????May the Science be with you!#CMW#ChennaiMetroWater#chennairains
— Chennai Metro Water (@CHN_Metro_Water) July 22, 2019