கொரோனாவில் இருந்து மீண்ட சென்னை மாவட்ட ஆட்சியர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் தமிழகத்தில் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரசியல்வாதிகள் என யாரையும் விட்டு வைக்காமல் இந்த கொரோனா வைரஸ் தாக்கி கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக வீட்டு தனிமையிலும் இருந்து வந்தார், இந்நிலையில் அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று அவர் பணிக்கு திரும்பியுள்ளார். சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலர் காளிதாஸ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றுள்ளார்.
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…