தயாநிதிமாறன் எம்பி தலைமையில் சென்னையின் வளர்ச்சி – கண்காணிப்பு குழு முக்கிய ஆலோசனை!
தயாநிதிமாறன் எம்.பி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையின் வளர்ச்சி குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தயாநிதிமாறன் எம்பி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். எம்பி., எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.