போகியின் போது பொதுமக்கள் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி புது முயற்சி..!
போகியின் போது பொதுமக்கள் பழைய பொருட்கள் எரிப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.
போகி பண்டிகையின் போது மக்கள் பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்த நிலையில் இதனை தடுக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வருகின்ற 13.01.2023 மற்றும் 14.01.2023 போகி பண்டிகைக்காக பொது மக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre), ரப்பர் ட்யூப் (Rubber Tube), மற்றும் நெகிழி (Plastic) ஆகியவற்றை எரிப்பதை தடுப்பதற்காகவும் மற்றும் சுற்றுசூழல் மாசு ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை கீழ்கண்டவாறு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, இதன்பொருட்டு 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தடுக்கும் வகையில் அவற்றை தனியாக பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் ஒப்படைக்க, மண்டல அலுவலர்கள் 1 முதல் 15 வரை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது குறித்து பொது மக்களுக்கு 07.0123 முதல் விழிப்புணர்வு (Awarenes) ஏற்படுத்தும் வகையில் BOV வாகனம் மூலம் Audio message விளம்பரம் செய்யுமாறும், மேலும் அனைத்து CI, C.S & AEE(SWM) தனிக்கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.