கொரனோ நோயாளி மற்றும் குடும்பத்தினரும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் குடும்பத்தினரும் வீட்டில் தனிமையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுரை.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 15,659 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கொரனோ நோயாளியின் குடும்பத்தினரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். விதிகளை மீறினால் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் கொரோனா மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார். வெளியில் சுற்றும் கொரோனா நோயாளின் குடும்பத்தினரும் தனிமை முகாம்களுக்கும் மாற்றப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025