அனைத்து மண்டலங்களிலும் விளம்பர பலகைகள், பதாகைகள் அகற்ற- சென்னை மாநகராட்சி உத்தரவு

அனைத்து மண்டலங்களிலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகள், விளம்பர தட்டிகளை முற்றிலும் உடனடியாக அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதன்மை செயலர்/ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க மண்டலம்-1 முதல் 15 வரை மண்டல அலுவலர்கள், மண்டல செயற் பொறியாளர்கள் மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் அந்தந்த மண்டல எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் (Hoardings), விளம்பர பதாகைகள் (Digital Banners), விளம்பர தட்டிகள் (Placards) மற்றும் அகற்றி சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து விதிகளின்படி தண்ட தொகையோ அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தோ நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை அறிக்கையாக மாநகர வருவாய் அலுவலர் அவர்களுக்கு தனிநபர் மூலம் இன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025