தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு..!
கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு.
தனியார் மருத்துமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற பரிந்துரை வழங்க கூடாது. தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தனிமைப்படுத்தல் காலகட்டத்திற்கு முன்பாகவே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒருவர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் இருப்பதா, கோவிட் சிகிச்சை மையத்தில் இருப்பதா, வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதா என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.