சென்னை மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்.! மீனவர்கள் அதிருப்தி.!
பட்டினம்பாக்கம் பகுதியில் மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொதுவெளியில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் :
அப்படி தான் இன்று, சென்னை பட்டினம்பக்கத்தில் , மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீன் கடைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். சாலையோரம் மீனவர்கள் மீன் விற்பது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
எதிர்ப்பும் – கோரிக்கையும் :
இதனால், அங்குள்ள மீனவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பலர் தங்கள் மீன்களை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மீனவர்களுக்கு உதவியாக மீன் விற்பனை அங்காடி திறக்க வேண்டும் எனவும், கோரிக்கை வைத்து வருகின்றனர். விற்பனை அங்காடி திறக்காமல், கடைகளை அகற்றினால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.