சென்னை மாநகராட்சியில் வருகிறது ஒரே பயண டிக்கெட் முறை; சட்டப்பேரவையில் அறிவிப்பு.!
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணிக்க ஒரே டிக்கெட் முறை என சட்டப்பேரவையில் அறிவிப்பு.
சென்னையில் மாநகரப்பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என அனைத்து வித போக்குவரத்திற்கும் இனி ஒரேவித டிக்கெட் முறையாக இ-டிக்கெட் எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பொதுப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
இதன்படி இனி ஒருங்கிணைந்த அனைத்து போக்குவரத்துகளிலும் பயணிக்க, ஒரே டிக்கெட்டில் இதனை பெறும் படியான QR பயணசீட்டு முறைக்காக, சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து இதற்கான செயலி உருவாக்கப்படும் என்றும், இந்த திட்டத்திற்கான மதிப்பீடாக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.