906 பம்புகள் ரெடி.. 114 இடங்களில் தீவிர பணி.. மழைநீர் எங்கும் தேங்கவில்லை.! – சென்னை மாநகராட்சி தகவல்.!

906 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. சென்னை மாநகராட்சி தகவல்.
இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை சுற்றுவட்டாரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழை அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. சென்னையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அதனை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி பதிவிடுகையில், சென்னை மாநகராட்சியில் 906 மோட்டார் பம்புகள் மழைநீரை வெளியேற்ற தயார் நிலையில் இருக்கிறது. அதில், மோட்டார் பம்புகள் மூலம் 114 இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. என்றும்,
சென்னையில் பெய்த மழையால் இன்று காலை 2 மரங்கள் முறிந்து விழுந்தன. அது தற்போது அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024