அம்மா உணவகத்தை புதுப்பிக்க 2 மடங்கு நிதி ஒதுக்கீடு.! சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!

Default Image

கடந்த ஆண்டை விட இந்தாண்டு அம்மா உணவகத்திற்கு அதிகமாக அதாவது கிட்டத்தட்ட  2 மடங்கு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது சென்னை மாநகராட்சி.

அதிமுக ஆட்சி காலத்தில் விலை மலிவாக அனைவரும் குறிப்பாக தினக்கூலியாக வேலை செய்யும் பலரும் பயனளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம். இங்கு இட்லி, சாம்பார் சாதம், சப்பாத்தி, தயிர் சாதம் போன்ற உணவுகள் 1 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி :

இந்த திட்டம் நஷ்டத்தில் இயங்கினாலும் மக்கள் பயன்பெறுவதால் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த அம்மா உணவகத்தினை மேம்படுத்த நிதியை ஒதுக்கியுள்ளது சென்னை மாநகராட்சி.

அம்மா உணவகம் புதுப்பிப்பு :

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கியுள்ளது. 2022 – 2023 ஆண்டிற்கான அம்மா உணவாக நீதியானது 4.85 கோடி ரூபாய் ஒதுக்கியது.தற்போது 2023 – 2024க்கான அமமா உணவாக நீதியானது கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயரத்தப்பட்டுள்ளது .

இரட்டிப்பு நிதி :

கூடுதல் சமையல் உபகரணங்கள், கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த 2023 – 2024 ஆண்டுக்கான அம்மா உணவாக மேம்பாட்டு நீதியானது 9.65 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு அம்மா உணவகத்தின் பணியாளர்கள் ஊதியம், அரசி பருப்பு காய்கறி கொள்முதல் பராமரிப்பு செலவு என சுமார் 120 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால், வருமானமாக 14 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்