“பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்” சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் பேட்டி!

Default Image

பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் பேட்டி அளித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் புதுச்சேரிக்கு 410 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் தெரிவிக்கட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தேவையில்லாமல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் வழக்கமான மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மக்கள் மேற்கொண்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சென்னையில் பெரும்பாலும் பகுதியில் வெள்ள அபாய முற்றிலுமாக தவிர்க்கபட்டுள்ளது. அந்த வகையில், 2015-ஆம் ஆண்டு 1500க்கும் மேற்பட்ட இடம் வெள்ளம் தேங்கும் இடமாக கண்டறியப்பட்டது, அடுத்தடுத்த ஆண்டுகளில் வெகுவாக குறைந்து தற்போது 25 இடமாக உள்ளது.

அதன்படி, சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனே மூட வேண்டும் மழைநீர் வடிகால் பகுதியில் நடைபெறும் சரி செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்