12 மணிக்குள் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் – மாநகராட்சி ஆணையர் உத்தரவு
சென்னையில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிற்பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.